மறைக்கும் புன்னகை

முழுமதியும் வெட்கித் தலைகுனியும்
உன் முக அழகிலடி!
பெருகியது உன் கொலுசொலியில்
என் மன அலைகளடி!

உன்னை கண்டதுவே‌ மோட்சமென
சோழனின் சிலைகளும் மகிழ்ந்தனடி!
வெந்நிறை விளக்குத் தீபமுமே
நீ நடந்திட உறைந்ததடி!

கண்டும் காணா உன்
கடைக்கண் பார்வைக்காக
குரங்காய் அலைந்தேனடி!

உதிர்ந்தும் உதிரா
நீ மறைக்கும் புன்னகையில்
உதித்தது என் காதலடி!

Load Comments?